Enable Javscript for better performance
நிதி நிறுவன ஊழியரிடம் ரூ. 1.27 லட்சம் பறிப்பு- Dinamani

சுடச்சுட

    

    குடியாத்தம் அருகே நிதி நிறுவன ஊழியரிடம் ரூ. 1.27 லட்சத்தை மர்ம நபர்கள் பறித்துச் சென்றனர்.
    குடியாத்தம் நடுப்பேட்டையில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வருபவர் பன்னீர்செல்வம் (57). இவர் செவ்வாய்க்கிழமை இரவு நிதி நிறுவனத்தை பூட்டி விட்டு, நிறுவனத்தின் பணம் ரூ. 1.27 லட்சத்தை பையில் எடுத்துக் கொண்டு பைக்கில் சென்று கொண்டிருந்தார்.
    அப்போது, பின்னால் பைக்கில் வந்த 2 மர்ம இளைஞர்கள் அவர் கையில் வைத்திருந்த பணப்பையைப் பறித்துக் கொண்டு சென்றனர்.
    இதுகுறித்த புகாரின் பேரில் குடியாத்தம் நகர போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai