Enable Javscript for better performance
பேர்ணாம்பட்டு நெடுஞ்சாலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்- Dinamani

சுடச்சுட

    

    பேர்ணாம்பட்டு நெடுஞ்சாலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

    By DIN  |   Published on : 09th February 2018 12:45 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பேர்ணாம்பட்டு நெடுஞ்சாலையை விரிவாக்கம் செய்து சாலை அமைக்கும் பணிக்காக சாலையின் இரு புறங்களிலும் உள்ள ஆக்கிரமிப்புகள் புதன்கிழமை அகற்றப்பட்டன.
    பேர்ணாம்பட்டு நெடுஞ்சாலையை விரிவாக்கம் செய்து சாலை அமைக்கும் பணிக்காக ரூ. 1.50 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. இதையடுத்து சாலையின் இரு புறங்களிலும் சுமார் 13 அடி அகலத்துக்கு சாலையை விரிவாக்கம் செய்ய சாலையோர ஆக்கிரிமிப்புகள் அகற்றப்பட்டன.
    ஆக்கிரமிப்புகள் அகற்றியதில் பாரபட்சம் உள்ளதாக ஆட்சியருக்கு பல்வேறு தரப்பில் இருந்து புகார்கள் சென்றன. இதையடுத்து பாரபட்சமின்றி ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆட்சியர் எஸ்.ஏ. ராமன் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதன் பேரில் வட்டாட்சியர் பத்மநாபன் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நெடுஞ்சாலைத் துறையினர் புதன்கிழமை ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai