Enable Javscript for better performance
போதைப் பொருள்கள் பறிமுதல்- Dinamani

சுடச்சுட

    

    திருப்பத்தூர் ரயில் நிலையத்தில் கைப்பற்றப்பட்ட போதைப் பொருள்கள் உணவுப் பாதுகாப்பு அதிகாரியிடம் வியாழக்கிழமை ஒப்படைக்கப்பட்டது.
    பெங்களூருவில் இருந்து கொச்சுவேலிக்கு செல்லும் விரைவு ரயில் கடந்த 1-ஆம் தேதி திருப்பத்தூர் ரயில் நிலையத்துக்கு வந்தது. அப்போது, கேட்பாரற்று ஒரு பை கிடப்பதாக ரயில் பயணிகள் திருப்பத்தூர் ரயில்வே பாதுகாப்புப் படைக்கு தகவல் அளித்தனர்.
    இதையடுத்து போலீஸார் அந்தப் பையை கைப்பற்றி, திறந்து பார்த்த போது, அதில் புகையிலை, மூக்குப் பொடி மற்றும் 100-க்கும் மேற்பட்ட போதைப் பொருள்கள் இருந்தது தெரிவந்தது.
    இதையடுத்து போலீஸார் அவற்றை உணவுப் பாதுகாப்பு அலுவலர் கந்தசாமியிடம் வியாழக்கிழமை ஒப்படைத்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai