Enable Javscript for better performance
மின்வாரியத்தில் வேலை: 42 பேரிடம் ரூ. 60 லட்சம் மோசடி: எஸ்.பி.யிடம் புகார்- Dinamani

சுடச்சுட

    

    மின்வாரியத்தில் வேலை: 42 பேரிடம் ரூ. 60 லட்சம் மோசடி: எஸ்.பி.யிடம் புகார்

    By DIN  |   Published on : 09th February 2018 12:43 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மின்வாரியத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி 42 பேரிடம் ரூ. 60 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளதாக வேலூர் மாவட்ட எஸ்.பி.யிடம் பாதிக்கப்பட்டோர் புகார்அளித்தனர்.
    திருவண்ணாமலை மாவட்டம், போளூரைச் சேர்ந்த மணிகண்டன், விஜயகுமார் உள்ளிட்ட 6 பேர் வேலூர் மாவட்ட எஸ்.பி. பகலவனிடம் வியாழக்கிழமை மனு அளித்தனர்.
    அதில், அரக்கோணத்தைச் சேர்ந்த அனிதா, மோகன், குகன் ஆகியோர் தங்களிடம் ரூ. 1 லட்சம் முதல் ரூ. 1.50 லட்சம் வரை பணம் பெற்றதாகவும், பின்னர் கூறியபடி மின்வாரியத்தில் வேலை வாங்கித் தராததுடன், கொடுத்தப் பணத்தை திருப்பித் தராமல் மோசடி செய்துவிட்டதாகவும் மனுவில் தெரிவித்திருந்தனர்.
    மேலும், போளூருக்கு உள்பட்ட பகுதிகளைச் சேர்ந்த 42 பேரிடம் இதேபோல் மொத்தம் ரூ. 60 லட்சம் அளவுக்கு பணத்தைப் பெற்றுக் கொண்டு மோசடி செய்திருப்பதாகவும், அவர்களிடம் இருந்து பணத்தைப் பெற்றுத் தர வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    மனுவைப் பெற்றுக் கொண்ட மாவட்ட எஸ்.பி., இதுதொடர்பாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்தார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai