Enable Javscript for better performance
விபத்தில் இறந்த வாடிக்கையாளர் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் அளிப்பு- Dinamani

சுடச்சுட

    

    விபத்தில் இறந்த வாடிக்கையாளர் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் அளிப்பு

    By DIN  |   Published on : 09th February 2018 12:45 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வேலூர் மண்டலத்தில் விபத்தில் உயிரிழந்த இந்தியன் ஓவர்சீஸ் வங்கி வாடிக்கையாளரின் குடும்பத்துக்கு காப்பீட்டுத் தொகை ரூ.10 லட்சத்துக்கான காசோலை அளிக்கப்பட்டது.
    யுனிவர்சல் சாம்போ ஜெனரல் காப்பீட்டு நிறுவனத்துடன் இணைந்து 'சுரக்ஷா' எனும் விபத்துக் காப்பீட்டுத் திட்டத்தை இந்தியன் ஓவர்சீஸ் வங்கி செயல்படுத்தி வருகிறது. இத்திட்டம் மூலம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி 18 முதல் 70 வயதுக்கு உள்பட்ட வாடிக்கையாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.100 பிரீமியம் கட்டணத்தில் ரூ.10 லட்சத்துக்கான விபத்து காப்பீடு வழங்கப்படுகிறது. இந்நிலையில், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் வேலூர் மண்டலத்துக்கு உள்பட்ட கொலுத்தம்பட்டு கிளையின் வாடிக்கையாளரான முருகன் அண்மையில் விபத்தில் உயிரிழந்தார். இதையடுத்து அவரது மனைவி சாந்திக்கு ரூ. 10 லட்சத்துக்கான காசோலையை வங்கியின் வேலூர் மண்டல முதன்மை மேலாளர் பி.சிவகுமார் திங்கள்கிழமை வழங்கினார்.
    இதில், வங்கியின் கொலுத்தம்பட்டு கிளை மேலாளர் சஞ்சீவ்குமார், விற்பனை மேலாளர் சிட்டிபாபு, காப்பீட்டு நிறுவன அதிகாரிகள் ஜெகதீசன், பாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai