Enable Javscript for better performance
5 வயது மகளுக்கு விஷம் கொடுத்து தந்தை தற்கொலை- Dinamani

சுடச்சுட

    

    வாணியம்பாடி அருகே குடும்பத் தகராறு காரணமாக 5 வயது மகளுக்கு விஷம் கொடுத்து தந்தை தற்கொலை செய்து கொண்டார். மகள் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
    சென்னையைச் சேர்ந்தவர் அருண்குமார் (28). இவரது மனைவி அனிதா. இவர்களுக்கு திருமணமாகி 7 ஆண்டுகள் ஆகிறது. 5 வயதில் பவனியா என்ற பெண் குழந்தை உள்ளது. கணவன்-மனைவி இருவரும் அங்குள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தனர்.
    இந்நிலையில், கடந்த சில மாதங்களாக தம்பதிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. கடந்த 5-ஆம் தேதி மீண்டும் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
    இதையடுத்து 6-ஆம் தேதி அருண்குமார் தனது மகள் பவனியாவை அழைத்துக் கொண்டு வாணியம்பாடியை அடுத்த சொரக்காயல் நத்தம் பகுதியில் உள்ள தனது சகோதரி வீட்டிற்கு சென்றுள்ளார்.
    மனமுடைந்த நிலையில் காணப்பட்ட அருண்குமார் புதன்கிழமை இரவு குளிர்பானத்தில் விஷம் கலந்து குடித்துள்ளார். மேலும், அவரது மகளுக்கும் கொடுத்துள்ளார்.
    மயங்கிய நிலையில் இருந்த இருவரையும் வீட்டில் இருந்தவர்கள் மீட்டு, வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அருண்குமார் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். பவனியா மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
    இதுகுறித்த புகாரின் பேரில் திம்மாம்பேட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai