சுடச்சுட

  

  ராணுவத்தில் வேலைவாங்கித் தருவதாக 10 பேரிடம் ரூ. 30.25 லட்சம் மோசடி

  By DIN  |   Published on : 14th June 2018 02:47 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ராணுவத்தில் வேலைவாங்கித் தருவதாகக் கூறி கே.வி.குப்பம் பகுதியைச் சேர்ந்த 10 பேரிடம் ரூ. 30.25 லட்சம் பணம் பெற்று மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பாதிக்கப்பட்டவர்கள் எஸ்.பி. அலுவலகத்தில் புகார் அளித்தனர்.
  வேலூர் மாவட்டம், கே.வி.குப்பத்தைச் சேர்ந்த இருவர், தங்களுக்கு இந்திய ராணுவத்தில் அதிகாரிகள் பலரையும் தெரியும் என்றும், அவர்கள் மூலமாக ராணுவத்தில் வேலை வாங்கித்தர முடியும் என்றும் கூறியுள்ளனர். இதை உண்மையென நம்பிய திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி வட்டத்தைச் சேர்ந்த பிரகாஷ், தனது உறவினர், நண்பர்கள் என 10 பேரைச் சேர்த்து ரூ. 30.25 லட்சம் பணத்தைக் கொடுத்துள்ளனர்.
  ஆனால், அவர்கள் கூறியபடி ராணுவத்தில் வேலை வாங்கித் தராததுடன், பணத்தைத் திருப்பித்தராமல் ஏமாற்றி வந்ததாகத் தெரிகிறது. இதையடுத்து பாதிக்கப்பட்ட பிரகாஷ் மற்றும் பணத்தை இழந்தவர்கள் வேலூர் எஸ்.பி. அலுவலகத்தில் புதன்கிழமை புகார் மனு அளித்தனர். 
  அதில், ராணுவத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.30.25 லட்சம் பணத்தைப் பெற்றுக்கொண்டு மோசடி செய்த இருவரையும் கைது செய்வதுடன், அவர்களிடம் இருந்து பணத்தைத் திரும்பப் பெற்றுத் தரவும் போலீஸார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளனர். இப்புகார் மீது போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai