Enable Javscript for better performance
இளைஞர் தற்கொலை- Dinamani

சுடச்சுட

    

    திருப்பத்தூர் அருகே வலிப்பு நோயால் அவதிப்பட்டு வந்த இளைஞர் வியாழக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    திருப்பத்தூரை அடுத்த கசிநாயக்கன்பட்டி நரசிங்கபுரம் பகுதியைச் சேர்ந்த ஜெயவேலின் மகன் கோபி (27). இவர், கடந்த சில ஆண்டுகளாக வலிப்பு நோயால் அவதிப்பட்டு வந்தாராம். சிகிச்சை பெற்றும் பலனில்லாததால் கோபி விரக்தியில் இருந்ததாகக் கூறப்படுகிறது.
    இந்நிலையில், விவசாய நிலத்தில் கோபி வியாழக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
    தகவலறிந்து அங்கு வந்த கந்திலி போலீஸார், சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.

    கிணற்றில் குதித்து கல்லூரி மாணவர் தற்கொலை
    ஆம்பூரில் கல்லூரி மாணவர் கிணற்றில் குதித்து சனிக்கிழமை தற்கொலை செய்து கொண்டார்.
     ஆம்பூர் சான்றோர்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் தீபக் பிரசாத் (20). கல்லூரி மாணவரான இவர், சனிக்கிழமை மாலை அதே பகுதியில் உள்ள பாழடைந்த கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டதாகத் தெரிகிறது.
    தகவல் அறிந்த ஆம்பூர் நகர போலீஸார் மற்றும் ஆம்பூர் தீயணைப்புத் துறையினர், அங்கு சென்று சடலத்தை மீட்டு ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  
    இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர்.

    விபத்தில் லாரி ஓட்டுநர் சாவு
    ஆம்பூர் அருகே வாகனம் மோதிய விபத்தில் லாரி ஓட்டுநர் உயிரிழந்தார்.
    விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே அரசனூரைச் சேர்ந்தவர் சரவணன் (26). லாரி ஓட்டுநரான இவர், வெள்ளிக்கிழமை இரவு கிருஷ்ணகிரியில் இருந்து சென்னை நோக்கி லாரியில் கிரானைட் ஏற்றிச் சென்றார். ஆம்பூரை அடுத்த அடுத்த பச்சகுப்பம் பகுதியில் லாரியை நிறுத்தினார்.
    சனிக்கிழமை அதிகாலை இவர் பச்சகுப்பம் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் நடந்து சென்றபோது, அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
    இதுகுறித்து ஆம்பூர் கிராமிய போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணைநடத்தினர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai