Enable Javscript for better performance
ஏரியிலிருந்து தொழிலாளியின் சடலம் மீட்பு- Dinamani

சுடச்சுட

    

    வாணியம்பாடி அருகே கடந்த 3 நாள்களாக காணாமல் போன தொழிலாளி உதயேந்திரம் ஏரியில் சடலமாக மீட்கப்பட்டார்.
    வாணியம்பாடியை அடுத்த உதயேந்திரத்தை சேர்ந்தவர் இக்மான் லூயிஸ் (40). தச்சுத் தொழிலாளியான இவருக்கு திருமணம் ஆகவில்லை. இவர், கடந்த 3 நாள்களாக வீடு திரும்பவில்லையாம். இதனால் அவரது பெற்றோர், உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடியுள்ளர்.
    இந்நிலையில், வெள்ளிக்கிழமை உதயேந்திரம் ஏரியில் அவ்வழியாகச் சென்றவர்கள் ஏரியில்  ஆண் சடலம் மிதப்பதாக வாணியம்பாடி கிராமிய போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீஸார் மற்றும் தீயணைப்புத் துறையினர் அங்கு சென்று சடலத்தை   மீட்டனர். இதில், ஏரியில் இறந்து கிடந்தது இக்மான் லூயிஸ் என்பது தெரியவந்தது.
    இதையடுத்து போலீஸார் மீட்கப்பட்ட சடலத்தை பிரேதப் பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai