Enable Javscript for better performance
கார் மோதியதில் கிராம நிர்வாக அலுவலர் சாவு- Dinamani

சுடச்சுட

    

    கணியம்பாடி அருகே கார் மோதிய விபத்தில் கொணவட்டம் கிராம நிர்வாக அலுவலர்  உயிரிழந்தார்.
    திருவண்ணாமலை மாவட்டம், போளூரை அடுத்த கருங்காலிக்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் குமரவேல் (40). இவர், கொணவட்டம் கிராம நிர்வாக அலுவலராகப் பணியாற்றி வந்தார். வெள்ளிக்கிழமை இரவு வழக்கம்போல் பணிகளை முடித்துவிட்டு, வீட்டுக்கு மோட்டார் பைக்கில் சென்றார். கணியம்பாடியை அடுத்த கணவாய்மேடு அருகே சென்றபோது, பைக் மீது ஆரணியிலிருந்து வேலூர் நோக்கி வந்த கார் மோதியது.
    இதில், தூக்கிவீசப்பட்டு பலத்த காயமடைந்த குமரவேல், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்த வேலூர் கிராமிய போலீஸார் சடலத்தை மீட்டு, வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai