Enable Javscript for better performance
மணல் கடத்தலைத் தடுத்த கிராம நிர்வாக அலுவலர் மீது தாக்குதல்   : இருவர் மீது வழக்கு- Dinamani

சுடச்சுட

    

    மணல் கடத்தலைத் தடுத்த கிராம நிர்வாக அலுவலர் மீது தாக்குதல்   : இருவர் மீது வழக்கு

    By DIN  |   Published on : 16th June 2018 11:49 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஆம்பூர் அருகே மணல் கடத்தலைத் தடுத்த கிராம நிர்வாக அலுவலர் மீது தாக்குதல் நடத்திய இருவர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.
     மாதனூர் வருவாய் ஆய்வாளர் சங்கர் தலைமையில், கிராம நிர்வாக அலுவலர்கள் சந்தீப், ராஜகோபால் ஆகியோர் மாதனூர் பாலாற்றில் சனிக்கிழமை திடீர் சோதனை நடத்தினர்.  
    அப்போது அங்கு மணல் கடத்தலில் ஈடுபடுத்தப்பட்ட ஒரு மாட்டு வண்டியை பறிமுதல் செய்தனர். அவர்களிடம் மாட்டு வண்டி உரிமையாளர் மணிவண்ணன் மற்றும் நவீன் ஆகிய இருவரும் வருவாய்த் துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
    மணிவண்ணன், கிராம நிர்வாக அலுவலர் சந்தீப்பை கையால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது.
     அதைத் தொடர்ந்து புகாரின் பேரில், ஆம்பூர் கிராமிய போலீஸார் வழக்குப் பதிந்து, தலைமறைவான மணிவண்ணன், நவீன் ஆகிய இருவரையும் தேடி வருகின்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai