Enable Javscript for better performance
மின்மாற்றி பழுதால் நீரின்றி கருகும் பயிர்கள்- Dinamani

சுடச்சுட

    

    பேர்ணாம்பட்டு அருகே மின்மாற்றி பழுதால், 10 நாள்களுக்கு மேலாக மின் விநியோகம் தடைபட்டதால் நீரின்றி விவசாயப் பயிர்கள் கருகுகின்றன.
    பேர்ணாம்பட்டை அடுத்த மேல்ஆலாங்குப்பத்தில் உள்ள மின்மாற்றி கடந்த 4-ஆம் தேதி பழுதடைந்ததால் அப்பகுதியில் மின் விநியோகம் தடைபட்டுள்ளது. இதனால், விவசாயப் பயிர்கள் நீரின்றி கருகுகின்றன. வீடுகளில் மின் விநியோகம் தடைபட்டதால் கிராம மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இதனால் மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டிகளில் நீரேற்ற முடியாததால் கிராமத்துக்கு குடிநீர் விநியோகம் முழுவதும் தடைபட்டது.
    இதையடுத்து மின் வாரியத்தினர் அருகே உள்ள வேறு ஒரு மின்மாற்றியில் இருந்து மறுநாள் வீட்டிற்குத் தேவையான மின் இணைப்பை (சிங்கிள் பேஸ்) கொடுத்தனர். இதையடுத்து வீடுகளில் விளக்குகள் மட்டும் எரிகின்றன.  இந்நிலையில், கடந்த 9-ஆம் தேதி முதல் மேல்நிலை நீர்தேக்கத் தொட்டிகளுக்கு மின் இணைப்பு கொடுக்கப்பட்டு, அவை இயங்குகின்றன. இதையடுத்து குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. ஆனால் மும்முனை மின்சார இணைப்பு இல்லாததால் நெல், கத்தரி, வெண்டை, பீர்க்
    கங்காய், பச்சைமிளகாய் போன்ற பயிர்கள் கருகுகின்றன.
    அண்மையில் தொடர் மழை பெய்ததை அடுத்து நீர்நிலைகள் நிரம்பியுள்ளன. இதனால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்ததால் பெரும்பாலான விவசாயிகள் நெற் பயிர்களை நடவு செய்துள்ளனர். இந்நிலையில் மின்சாரம் இல்லாததால் தண்ணீர் பாய்ச்ச முடியாமல் நெற் பயிர்கள் கருகுகின்றன. இதனால் கடன் வாங்கி நெற் பயிர் நடவு செய்த விவசாயிகள் பெரும் கவலை அடைந்துள்ளனர்.
    மின்வாரியத்தினர் முயற்சி செய்தும் சனிக்கிழமை மாலை வரை இக்கிராமத்துக்கு மும்முனை மின்சாரம் கிடைக்கவில்லை. இதனால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai