Enable Javscript for better performance
விழிப்புணர்வு முகாம்- Dinamani

சுடச்சுட

    

    ஆம்பூர் அருகே பொன்னப்பல்லி கிராமத்தில் நக்ஸல் தடுப்புப் பிரிவு போலீஸார், வனத்துறை சார்பில் பொதுமக்களுக்கான விழிப்புணர்வு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
    ஆம்பூர் அருகே பொன்னப்பல்லி கிராமத்தில் நாட்டு வெடிகுண்டு வெடித்து 2 ஆடுகள் இறந்த சம்பவம் நடந்த பகுதியில் நக்ஸல் தடுப்புப் பிரிவு துணை ஆய்வாளர் இளவரசன் விசாரணை நடத்தினார். பின்னர், பொன்னப்பல்லியில் பொதுமக்களிடையே நக்ஸல் தடுப்பு போலீஸார் மற்றும் வனத் துறையினர் இணைந்து விழிப்புணர்வு முகாமை நடத்தினர். வனவர் கருணாமூர்த்தி, வனக்காப்பாளர்கள் காந்தராஜ், விஜயன், முனிசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.
    ஆம்பூர் அருகே மிட்டாளம் ஊராட்சி, பைரப்பள்ளி ஊட்டல் காப்புக்காட்டில் 2-ஆம் நாளாக நக்ஸல் தடுப்பு போலீஸார் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai