Enable Javscript for better performance
50 அடி பள்ளத்தில் லாரி கவிழ்ந்து 7 பேர் பலி: 20க்கும் மேற்பட்டோர்  காயம்- Dinamani

சுடச்சுட

    

    50 அடி பள்ளத்தில் லாரி கவிழ்ந்து 7 பேர் பலி: 20க்கும் மேற்பட்டோர்  காயம்

    By DIN  |   Published on : 16th June 2018 11:50 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வேலூர் மாவட்டம் அருகே ஆந்திரம் மாநிலத்தின் பெத்தவாங்கா பகுதியில் 50 அடி பள்ளத்தில் லாரி கவிழ்ந்த விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த 7 தொழிலாளிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பலத்த காயமடைந்த 13 தொழிலாளர்கள் வாணியம்பாடி அரசு மருத்துவமனையிலும், சுமார் 10 தொழிலாளர்கள் குப்பம், சித்தூர் மருத்துவமனைகளிலும்
    அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
    ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டத்துக்கு உட்பட்ட குப்பம் பகுதியிலிருந்து மாங்காய்களை ஏற்றிக் கொண்டு வேலூர் நோக்கி சரக்கு லாரி சனிக்கிழமை இரவு வந்து கொண்டிருந்தது. அந்த லாரியில் வேலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதியைச் சேர்ந்த 30 தொழிலாளர்கள் வந்துள்ளனர். அந்த லாரி சித்தூர் மாவட்டம், பெத்தவாங்கா பகுதியில் வந்த போது கனமழை காரணமாக சுமார் 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது.
    இதில், லாரியில் இருந்த நாட்றாம்பள்ளியைச் சேர்ந்த 7 தொழிலாளிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பலத்த காயமடைந்த 13 பேர் வாணியம்பாடி அரசு மருத்துவமனையிலும், மற்ற சுமார் 10 தொழிலாளிகள் குப்பம், சித்தூர் மருத்துவமனைகளிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்களில் சிலரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என தெரிகிறது. இந்த விபத்து குறித்து ஆந்திர மாநில போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai