Enable Javscript for better performance
7 பேர் விடுதலை மனு நிராகரிப்பு: சிறையில் நளினி, முருகன் கண்ணீர்- Dinamani

சுடச்சுட

    

    7 பேர் விடுதலை மனு நிராகரிப்பு: சிறையில் நளினி, முருகன் கண்ணீர்

    By DIN  |   Published on : 16th June 2018 11:55 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஏழு பேரின் விடுதலை தொடர்பான தமிழக அரசின் மனுவை குடியரசுத் தலைவர் நிராகரித்ததை அடுத்து வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நளினி, முருகன் ஆகிய இருவரும் சனிக்கிழமை நேரில் சந்தித்து கண்ணீருடன் பேசிக் கொண்டதாக சிறைக் காவலர்கள் தெரிவித்தனர்.
    முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறை தண்டனை அனுபவித்து வரும் முருகன், நளினி, பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுவிக்கக் கோரி தமிழக அரசு அனுப்பிய மனுவை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கடந்த வெள்ளிக்கிழமை நிராகரித்தார். இதனால், 7 பேரும் விடுதலையாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.   இதனிடையே, வேலூர் மத்திய ஆண்கள் சிறையில் உள்ள முருகன், பெண்கள் சிறையில் அடைக்கப் பட்டுள்ள தனது மனைவி நளினியை நீதிமன்ற உத்தரவுப்படி 15 நாள்களுக்கு ஒருமுறை சந்தித்து வருகிறார். இதன்படி, வேலூர் ஆண்கள் சிறையில் உள்ள முருகனை வேலூர் ஆயுதப்படை டி.எஸ்.பி. விநாயகம் தலைமையில் போலீஸார் பாதுகாப்புடன் சனிக்கிழமை காலை பெண்கள் சிறையிலுள்ள நளினியை சந்திக்க அழைத்துச் சென்றனர். அங்கு காலை 8.15 மணி முதல் 9.15 மணி வரை இருவரும் சந்தித்தனர்.
    சிறையில் மனஅமைதிக்காக கடந்த 54 நாள்களாக மௌன விரதம் இருந்து வந்த முருகன், வெள்ளிக் கிழமை மாலை தனது விரதத்தை முடித்துக் கொண்டார். இந்நிலையில், நளினியை சனிக்கிழமை காலை சந்தித்த முருகன், ராஜீவ் காந்தி கொலை குற்றவாளிகள் 7 பேரை விடுவிக்கக் கோரிய தமிழக அரசின் மனுவை குடியரசுத் தலைவர் நிராகரித்தது தொடர்பாக இருவரும் பேசினர். அப்போது, தங்களுக்கு விடுதலை கிடைக்குமா? அல்லது சிறையிலேயே வாழ்நாள் முடிந்துவிடுமா? என இருவரும் கண்ணீர் வடித்தபடி கவலையுடன் பேசிக்கொண்டதாக சிறைக் காவலர்கள் தெரிவித்தனர்.
    முன்னதாக சம்பந்தப்பட்ட மனுவை குடியரசுத் தலைவர் நிராகரித்தது தொடர்பாக பேரறிவாளனின் தாய் அற்புதம்மாள் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் கூறுகையில், பேரறிவாளனையும், என்னையும் கருணைக் கொலை செய்ய அரசு உத்தரவிட வேண்டும் எனக் கூறி கண்கலங்கியது குறிப்பிடத்தக்கது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai