Enable Javscript for better performance
ஆக்கிரமிப்பில் இருந்த அரசு நிலங்கள் மீட்பு- Dinamani

சுடச்சுட

    

    அரக்கோணம் அருகே, தனியார் ஆக்கிரமிப்பில் இருந்த அரசுக்குச் சொந்தமான நிலங்களை, வட்டாட்சியர் தலைமையில் வருவாய்த் துறையினர் வெள்ளிக்கிழமை மீட்டனர்.
    அரக்கோணத்தை அடுத்த ஆணைப்பாக்கம் ஊராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில், அரசுக்குச் சொந்தமான நிலங்களை பலர் வேலியிட்டு ஆக்கிரமிப்பு செய்து வருவதாகவும், நீராதாரப் பகுதிகளிலும் அரசு நிலங்களை ஆக்கிரமிக்க தொடங்கியுள்ளதாகவும், காளவாய் புறம்போக்கு நிலங்களை வேலியிட்டு வருவதாகவும், அரக்கோணம் வட்டாட்சியரிடம், ஆணைப்பாக்கம் கிராம நிர்வாக அலுவலர் சிவராஜ் புகார் அளித்தார்.
    இதையடுத்து, வட்டாட்சியர் பாபு தலைமையில், மண்டல துணை வட்டாட்சியர் சரவணமுத்து, வருவாய் ஆய்வாளர் ரஜினிகாந்த் உள்ளிட்ட அலுவலர்கள் அங்கு சென்று, வேலிகளை அகற்றி, ஆக்கிரமிப்பில் இருந்த அரசு நிலங்களை மீட்டனர். அரசு நிலங்களை ஆக்கிரமிப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, வட்டாட்சியர் பாபு எச்சரித்தார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai