Enable Javscript for better performance
ஆயுள் சிறை கைதி மருத்துவமனையில் அனுமதி- Dinamani

சுடச்சுட

    

    வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆயுள் சிறை தண்டனை கைதிக்கு ஏற்பட்ட உடல் நல பாதிப்பை அடுத்து அவர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
    கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டையைச் சேர்ந்தவர் குமார் (50). கொலை வழக்கு ஒன்றில் கடந்த 2003-ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட இவருக்கு, ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. தொடர்ந்து, இவர் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ள குமார், தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
    இந்நிலையில், குமாருக்கு வெள்ளிக்கிழமை காலை திடீரென உடல்நல பாதிப்பு ஏற்பட்டது. உடனடியாக சிறைத் துறை அதிகாரிகள் அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர்.
    பின்னர், வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.வேலூர், மார்ச் 23: வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆயுள் சிறை தண்டனை கைதிக்கு ஏற்பட்ட உடல் நல பாதிப்பை அடுத்து அவர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்
    பட்டுள்ளார்.
    கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டையைச் சேர்ந்தவர் குமார் (50). கொலை வழக்கு ஒன்றில் கடந்த 2003-ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட இவருக்கு, ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. தொடர்ந்து, இவர் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ள குமார், தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
    இந்நிலையில், குமாருக்கு வெள்ளிக்கிழமை காலை திடீரென உடல்நல பாதிப்பு ஏற்பட்டது. உடனடியாக சிறைத் துறை அதிகாரிகள் அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர்.
    பின்னர், வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai