Enable Javscript for better performance
எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை- Dinamani

சுடச்சுட

    

    வேலூர் கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளராக பொறுப்பேற்ற அரக்கோணம் எம்எல்ஏ சு.ரவி, வாலாஜாபேட்டையில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு வெள்ளிக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
    வேலூர் கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளராக, அரக்கோணம் எம்எல்ஏ சு.ரவி நியமிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து, எம்எல்ஏ சு.ரவி, வாலாஜாபேட்டைக்கு வெள்ளிக்கிழமை வந்தார். அவருக்கு வாலாஜாபேட்டை நகரச் செயலாளர் டபுள்யூ.ஜி.மோகன் தலைமையில் அக்கட்சியினர் வரவேற்பு அளித்தனர்.
    தொடர்ந்து, அமைச்சர் கே.சி. வீரமணி முன்னிலையில், அங்குள்ள எம்ஜிஆர். சிலைக்கு, மாவட்ட செயலாளர் சு.ரவி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
    நிகழ்ச்சியில், கே.வி.குப்பம் எம்எல்ஏ ஜி.லோகநாதன், முன்னாள் அமைச்சர் அ.முகமதுஜான், மாவட்ட முன்னாள் செயலாளர்கள் சுமைதாங்கி சி.ஏழுமலை, எஸ்ஆர்கே. அப்பு மற்றும் நகர, ஒன்றியச் செயலாளர்கள் உள்பட 500 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai