Enable Javscript for better performance
ஏப்.15-இல் திருநங்கைகள் கலை விழா- Dinamani

சுடச்சுட

    

    திருநங்கைகள் தினத்தையொட்டி தென்னிந்திய திருநங்கைகளின் கலை விழா வேலூரில் ஏப்ரல் 15-ஆம் தேதி நடைபெற உள்ளது.
    வேலூர் மாவட்ட திருநங்கைகள் அமைப்பு சார்பில் அண்ணா கலையரங்கத்தில் நடைபெறும் இந்த கலை விழாவில், தமிழகம், புதுச்சேரி, ஆந்திரம், தெலங்கானா, கேரளம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் பங்கேற்க உள்ளனர். இதுகுறித்து வேலூரில் செய்தியாளர்களிடம் மாவட்ட திருநங்கைகள் அமைப்புத் தலைவர் ஆர்.கங்காநாயக் வியாழக்கிழமை கூறியதாவது:
    தென்னிந்திய திருநங்கைகளின் கலை விழாவில் திருநங்கைகளுக்கான அரசுத் திட்டங்கள், அதைப் பெறும் முறைகள் குறித்து அரசு அதிகாரிகள் விளக்கமளிக்க உள்ளனர். தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடத்தி, திருநங்கைகளுக்கு வேலைவாய்ப்பும் ஏற்படுத்தித் தரப்பட உள்ளது.
    சுயதொழில் புரிய ஆர்வமுள்ள திருநங்கைகளுக்கு நிதியுதவி செய்யவுள்ள கொடையாளர்களும் பங்கேற்க உள்ளனர். அத்துடன், பல்வேறு மாநில, மாவட்ட அளவில் திருநங்கை கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகளும், அவர்களின் அறிவு, ஆரோக்கியத்தை வெளிப்படுத்தும் விதமாக 'மிஸ் சௌத் இந்தியா -2018' திருநங்கைத் தேர்வும் நடக்க உள்ளது. மேலும், திருநங்கைகளின் வாழ்வியலை விளக்கும் குறும்படம் திரையிடலும், அவர்களின் முன்னேற்றம் குறித்த புகைப்படக் கண்காட்சியும், திருநங்கைகளுக்கு உதவி செய்வோருக்கு விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளன.
    இதில் பங்கேற்க மாநில அமைச்சர்கள் கே.சி.வீரமணி, நீலோபர் கபில், விஐடி பல்கலைக்கழக வேந்தர் ஜி.விசுவநாதன், நடிகை ராதா உள்ளிட்ட பல்வேறு பிரமுகர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.
    பேட்டியின்போது, விழா ஒருங்கிணைப்பாளர்கள் சுதா, பாரதிகண்ணம்மா உள்ளிட்டோர் இருந்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai