Enable Javscript for better performance
கல்லூரி மாணவிகளுக்கு பணி நியமன ஆணை- Dinamani

சுடச்சுட

    

    வந்தவாசி ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி மகளிர் கல்லூரியில் நடைபெற்ற வளாக வேலைவாய்ப்பு நேர்காணலில் தேர்வு பெற்ற மாணவிகளுக்கு வியாழக்கிழமை பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.
    ஸ்ரீபெரும்புதூர் புளூஓஷன் பர்சனல் மற்றும் அலைடு சர்வீசஸ் நிறுவனம் சார்பில் இந்தக் கல்லூரியில் வளாக வேலைவாய்ப்பு நேர்காணல் அண்மையில் நடைபெற்றது.
    இதில், கல்லூரியில் இளநிலை இறுதியாண்டு பயிலும் 300 மாணவிகள் பங்கேற்றனர். இவர்களில் 210 பேர் வேலைக்கு தேர்வு செய்யப்பட்டனர். இந்த நிலையில், வேலைக்கு தேர்வு செய்யப்பட்ட மாணவிகளுக்கு பணி நியமன ஆணைகளை அந்த நிறுவன அதிகாரிகள் வி.சரவணகுமார், கே.ராம்கி ஆகியோர் வழங்கினர்.
    நிகழ்ச்சியில் கல்லூரி நிறுவனர் பி.முனிரத்தினம், செயலர் எம்.ரமணன், முதல்வர் எஸ்.மைதிலி, துணை முதல்வர் கே.சுகுணா, கல்லூரி வேலைவாய்ப்புத் துறை அலுவலர் கோ.சரோஜினி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai