Enable Javscript for better performance
குப்பையை திரவ உரமாக மாற்றும் திட்டம்: விஞ்ஞானி நேரில் ஆய்வு- Dinamani

சுடச்சுட

    

    குப்பையை திரவ உரமாக மாற்றும் திட்டம்: விஞ்ஞானி நேரில் ஆய்வு

    By DIN  |   Published on : 24th March 2018 01:13 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருப்பத்தூர் நகராட்சியில் குப்பைகளை திரவ உரமாக மாற்றும் திட்டத்தை ஹைதராபாத்தைச் சேர்ந்த விஞ்ஞானி சங்கரன் வியாழக்கிழமை நேரில் ஆய்வு செய்தார்.
    திருப்பத்தூர் நகராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகளை திரவ உரமாக மாற்றும் திட்டத்தை விஞ்ஞானி சங்கரன் வியாழக்கிழமை நேரில் பார்வையிட்டு, திட்டத்தை மேம்படுத்த ஆலோசனைகளை வழங்கினார்.
    அப்போது, துப்புரவு ஆய்வாளர் விவேக், துப்புரவு அலுவலர் ராஜரத்தினம் மற்றும் தூயநெஞ்சக் கல்லூரியின் சமூகப் பணிப் பிரிவு மாணவ, மாணவிகள் உடனிருந்தனர்.
    இதுகுறித்து துப்புரவு அலுவலர் ராஜரத்தினம் கூறுகையில், இங்கு பிரிக்கப்பட்ட திரவ உரம், பரிசோதனைக்காக கோயமுத்தூர் பகுப்பாய்வு கூடத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது.
    ஆய்வின் முடிவு பெற்றவுடன், திருப்பத்தூர் நகராட்சிக்கு உள்பட்ட அனைத்து வார்டுகளிலும் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது என்றார் அவர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai