Enable Javscript for better performance
சுய உதவிக் குழுவினருக்கு ரூ.1.30 கோடி கடனுதவி- Dinamani

சுடச்சுட

    

    திருப்பத்தூர் அருகே, மகளிர் சுய உதவி குழுவினருக்கு ரூ.1.30 கோடி கடனுதவி இந்தியன் வங்கி சார்பில் வழங்கப்பட்டது.
    திருப்பத்தூரை அடுத்த மிட்டூரில், பிரீடம் பவுண்டேஷன் தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு கடனுதவி வழங்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, மிட்டூர் இந்தியன் வங்கி கிளை மேலாளர் டி.யுவராஜா தலைமை வகித்தார். பவுண்டேஷன் இணை இயக்குநர் ஏ.அன்பழகன் வரவேற்றார். விவசாய பிரிவு மேலாளர் ஜெ.ஜெயவாணன், ஆலங்காயம் இந்தியன் வங்கி கிளை மேலாளர் டி.பூவேல், பவுண்டேஷன் இயக்குநர் ஆர்.ராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
    நிகழ்ச்சியில், திருப்பத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் டி.ரகுபதி கலந்து கொண்டு, 500க்கும் மேற்பட்ட மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ. 1.30 கோடி கடனுதவி வழங்கினார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai