Enable Javscript for better performance
திருவள்ளுவர் பல்கலை., துணைவேந்தருக்கு தலைசிறந்த ஆசிரியர் ஆராய்ச்சியாளர் விருது- Dinamani

சுடச்சுட

    

    திருவள்ளுவர் பல்கலை., துணைவேந்தருக்கு தலைசிறந்த ஆசிரியர் ஆராய்ச்சியாளர் விருது

    By DIN  |   Published on : 24th March 2018 01:14 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நோய் எதிர்ப்பியல் மற்றும் நுண்ணுயிரியல் துறை ஆராய்ச்சியில் புதிய உத்தி முறைகளைக் கண்டறிந்து பங்களிப்பு செய்தமைக்காக வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகத் துணைவேந்தர் க.முருகனுக்கு 2018-ஆம் ஆண்டுக்கான அகில இந்திய அளவில் தலைசிறந்த ஆசிரியர் ஆராய்ச்சியாளர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
    புது தில்லியை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் 'கேரியர் 360' என்னும் அமைப்பு அகில இந்திய அளவில் பல்வேறு துறைகளில் தலைசிறந்த பங்களிப்பு செய்துவரும் கல்வி நிறுவனங்களையும், ஆராய்ச்சியாளர்களையும் அடையளம் கண்டு ஆண்டுதோறும் விருது வழங்கி கௌரவித்து ஊக்கப்படுத்தி வருகிறது.
    அதன்படி, 2018-ஆம் ஆண்டு விருதுக்கு நாடு முழுவதும் மருத்துவம், பொறியியல், வேளாண்மை, சூழலியல், உளவியியல் உள்ளிட்ட 24 துறைகளில் மிகச்சிறந்த பங்களிப்பு செய்த 254 ஆராய்ச்சியாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
    அவர்களில் வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகத் துணைவேந்தர் க.முருகன், நோய் எதிர்ப்பியல் மற்றும் நுண்ணுயிரியல் துறை ஆராய்ச்சியில் புதிய உத்தி முறைகளைக் கண்டறிந்து பங்களிப்பு செய்தமைக்காக 2018-ஆம் ஆண்டுக்கான அகில இந்திய அளவில் தலைசிறந்த ஆசிரியர் ஆராய்ச்சியாளர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டதாக அண்மையில் அறிவிக்கப்பட்டார்.
    புது தில்லியில் கடந்த 20-ஆம் தேதி நடைபெற்ற விழாவில், மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர், அகில இந்திய தொழில்நுட்பக் கல்வியியல் கழகத் தலைவர் அனில்டி சகஸ்ரபுத்தே ஆகியோர் துணைவேந்தர் க.முருகனுக்கு விருதை வழங்கி
    கௌரவித்தனர்.
    விருது பெற்ற துணைவேந்தர் க.முருகனுக்கு பல்கலைக்கழகப் பதிவாளர் (பொறுப்பு) வெ.பெருவழுதி, துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai