Enable Javscript for better performance
தொடரும் சங்கிலி பறிப்புச் சம்பவங்கள்: பொதுமக்கள் பீதி- Dinamani

சுடச்சுட

    

    தொடரும் சங்கிலி பறிப்புச் சம்பவங்கள்: பொதுமக்கள் பீதி

    By DIN  |   Published on : 24th March 2018 01:11 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பாணாவரம் அருகே, வெள்ளிக்கிழமை நடைபெற்ற சங்கிலி பறிப்பு சம்பவத்தில் படுகாயமடைந்த பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடரும் இதுபோன்ற சம்பவங்களால் கிராம மக்கள் பீதியடைந்துள்ளனர்.
    அரக்கோணத்தை அடுத்த பாணாவரம் அருகே உள்ள போலிப்பாக்கத்தை சேர்ந்தவர் ஜெகந்நாதன் (57). சோளிங்கரில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி கோவிந்தம்மாள் (49). இவர் தான் வீட்டில் வளர்த்து வரும் ஆடுகளை, போலிப்பாக்கம் - தப்பூர் சாலையில் உள்ள தர்மகர்த்தா நிலம் அருகே மேய்ச்சலுக்கு ஓட்டிச் சென்றார்.
    அப்போது, ஒரே பைக்கில் வந்த மூன்று பேர், திடீரென கோவிந்தம்மாளின் கழுத்தில் இருந்த 2 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக்கொண்டு மின்னல் வேகத்தில் சென்றனர்.
    கொள்ளையர்கள் தள்ளிவிட்டதில் கீழே விழுந்து படுகாயமடைந்த கோவிந்தம்மாள், சோளிங்கர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் குறித்து பாணாவரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கடந்த இரு தினங்களுக்கு முன், மாங்குப்பத்தில், சுகாதாரத்துறை ஆய்வாளர் ஒருவரிடம் தங்கச்சங்கிலியை பறிக்க முயன்றபோது, அவர் கீழே விழுந்து படுகாயமடைந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இறந்தது குறிப்பிடத்தக்கது.
    தொடரும் இதுபோன்ற சம்பவங்களால், பாணாவரம் கிராம மக்கள் பீதியடைந்துள்ளனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai