Enable Javscript for better performance
தொடரும் போலீஸார் தற்கொலை: தேசிய மனித உரிமை ஆணையத்தில் புகார்- Dinamani

சுடச்சுட

    

    தொடரும் போலீஸார் தற்கொலை: தேசிய மனித உரிமை ஆணையத்தில் புகார்

    By DIN  |   Published on : 24th March 2018 01:11 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தமிழகத்தில் தொடர்ந்து போலீஸார் தற்கொலை மற்றும் மனஉளைச்சலுக்கு காரணமான உயர்அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தேசிய மனித உரிமை ஆணையத்தில் காங்கிரஸ் கட்சியின் மாநில சிறுபான்மை துறைத் தலைவர் ஜெ.அஸ்லம் பாஷா புகார் மனு அளித்துள்ளார்.
    இதுகுறித்து தேசிய மனித உரிமை ஆணையத் தலைவர், தமிழக ஆளுநர், முதல்வர், உள்துறைச் செயலர், காவல் துறைத் தலைவர் உள்ளிட்டோருக்கு அவர் அனுப்பி உள்ள புகார் மனுவில்
    கூறியிருப்பதாவது:
    தமிழகத்தில் அண்மைக் காலமாக காவலர்கள் அதிக பணிச் சுமை காரணமாகவும், உயர் அதிகாரிகள் ஜாதி ரீதியாக பழி வாங்கும் நோக்கத்தில் ஈடுபடுவதாலும், ஆண் மற்றும் பெண் காவலர்கள் தற்கொலை செய்து கொள்வதும், தற்கொலைக்கு முயற்சிப்பதும் அதிகளவில் நடைபெற்று வருகிறது.
    தற்கொலைக்கு தூண்டுவதற்கு காரணமாக உள்ள காவல் துறை உயர் அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும், காவலர்களை பாதுகாக்க உரிய மனநல ஆலோசனைகள் வழங்க வேண்டும் எனவும் அதில் குறிப்பிட்டுள்ளார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai