Enable Javscript for better performance
நகை பறிப்பு: கொள்ளையர்களை பிடிக்க போலீஸார் தீவிரம்: விடியோ பதிவுகள் வெளியீடு- Dinamani

சுடச்சுட

    

    நகை பறிப்பு: கொள்ளையர்களை பிடிக்க போலீஸார் தீவிரம்: விடியோ பதிவுகள் வெளியீடு

    By DIN  |   Published on : 24th March 2018 01:12 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ராணிப்பேட்டை பகுதியில் தொடர்ந்து நகைப் பறிப்பில் ஈடுபட்டு வந்த கொள்ளையர்களைப் பிடிக்க போலீஸார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். மேலும், கொள்ளையர்களின் முகங்கள் பதிவான விடியோ காட்சி தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
    இதுகுறித்து எஸ்.பி. பகலவன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
    ராணிப்பேட்டை சிப்காட் பகுதியைச் சேர்ந்தவர் வீராசாமி. இவரது மனைவி மல்லிகா (57). இவர், ஆரம்ப சுகாதார நிலையத்தில் சுகாதார ஆய்வாளராகப் பணியாற்றி வந்தார். கடந்த 20-ஆம் தேதி மாலை வீராசாமியுடன் பைக்கில் வீடு திரும்பிய போது மல்லிகாவின் கழுத்திலிருந்த தங்கச் சங்கிலியை மர்ம நபர்கள் 2 பேர் பறித்தனர். அப்போது, நிலை தடுமாறி விழுந்த மல்லிகா, பலத்த காயமடைந்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, உயிரிழந்தார்.
    இதுகுறித்து பாணாவரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து தலைமறைவான மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.
    எனினும், இதுவரை கொள்ளையர்கள் சிக்காததால் அவர்களின் முகங்கள் பதிவான விடியோ காட்சியை போலீஸார் வெள்ளிக்கிழமை வெளியிட்டனர். இவர்கள் குறித்து தகவல் தெரியவந்தால் அரக்கோணம் உள்கோட்ட டி.எஸ்.பி. குத்தாலிங்கத்தை 94981 45347, 04177 -237123 ஆகிய எண்களிலும், பாணாவரம் காவல் ஆய்வாளர் மகாலிங்கத்தை 94981 47700, எஸ்.பி. அலுவலகத்தை 0416-2255999, 94981 05102 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai