Enable Javscript for better performance
பயிர்களை நாசம் செய்த காட்டு யானைகள்- Dinamani

சுடச்சுட

    

    குடியாத்தம் அருகே தண்ணீர் தேடி கிராமத்துக்குள் வந்த காட்டு யானைகள் விவசாயப் பயிர்களை நாசம் செய்து விட்டுச் சென்றன.
    குடியாத்தத்தை அடுத்த சைனகுண்டா, மோர்தானா உள்ளிட்ட கிராமங்கள் ஆந்திர மாநில எல்லையில் அமைந்துள்ளன. அம்மாநில வனப் பகுதியில் இருந்து கடந்த சில வாரங்களாக தண்ணீர் தேடி யானைகள் கூட்டம், கூட்டமாக வன எல்லையில் உள்ள கிராமங்களில் நுழைகின்றன.
    அவை பயிரிடப்பட்டுள்ள தென்னை, வாழை, மா, கேழ்வரகு உள்ளிட்ட பயிர்களை யானைகள் நாசம் செய்து விட்டுச் செல்கின்றன. இது அடிக்கடி நடக்கும் நிகழ்வாக உள்ளது. பாதிக்கப்பட்ட விவசாயிகள் வனத் துறையினரிடம் சென்று புகார் தெரிவித்துள்ளனர்.
    இந்நிலையில் கடந்த சில நாள்களில் ஒற்றை யானை ஒன்று இப்பகுதியில் நடமாடி வருகிறது. அது பகல் நேரங்களிலும் வனப் பகுதியில் இருந்து வந்து செல்வதால் அப்பகுதி மக்களும், அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகளும் பெரும் அச்சமடைந்துள்ளனர்.
    வியாழக்கிழமை இரவு ஒரு குட்டியுடன் வந்த 4 யானைகள் அங்குள்ள காங்கிரஸ் கட்சியின் விவசாயப் பிரிவு பொதுச் செயலர் எஸ்.எம். தேவராஜின் நிலத்தில் இருந்த மா மரங்களை நாசம் செய்து விட்டுச் சென்றுள்ளன.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai