Enable Javscript for better performance
பேர்ணாம்பட்டு பகுதியில் நில நடுக்கம்: பொதுமக்கள் அச்சம்- Dinamani

சுடச்சுட

    

    பேர்ணாம்பட்டு பகுதியில் நில நடுக்கம்: பொதுமக்கள் அச்சம்

    By DIN  |   Published on : 24th March 2018 01:10 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வேலூர் மாவட்டம், பேர்ணாம்பட்டு நகரம், சுற்றுப்புற பகுதிகளில் வெள்ளிக்கிழமை காலை 2 முறை லேசான நில நடுக்கம் ஏற்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் தெருக்களில் தஞ்சம் அடைந்தனர்.
    பேர்ணாம்பட்டு நகராட்சிக்கு உள்பட்ட பஜார் வீதி, லால்மசூதி தெரு, ஒத்தவாடை தெரு, புது வீதி மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள பங்களாமேடு, ஏரிகுத்திமேடு, மேல்பட்டி, செண்டத்தூர், சாத்கர் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை காலை 7.05 மணிக்கு பெரும் சப்தத்துடன் நில நடுக்கம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து 7.30 மணி அளவில் மீண்டும் ஒரு முறை நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது. 3 விநாடிகள் வரை இந்த நில நடுக்கம் நீடித்துள்ளது.
    இதனால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் வீடுகளில் இருந்து வெளியேறி தெருக்களில் தஞ்சம் அடைந்தனர். ஏரிகுத்திமேடு பகுதியில் சில வீடுகளில் லேசான விரிசல் ஏற்பட்டுள்ளது. தகவலறிந்ததும் பேர்ணாம்பட்டு வட்டாட்சியர் மகாலிங்கம், வருவாய் ஆய்வாளர் பழனி உள்ளிட்ட வருவாய்த் துறையினர் அங்கு சென்று பொதுமக்களிடம் விசாரணை நடத்தினர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai