Enable Javscript for better performance
ராணுவத்துக்கு ஆள்சேர்ப்பு முகாம்: நாக்பூரில் 26-இல் தொடக்கம்- Dinamani

சுடச்சுட

    

    ராணுவத்துக்கு ஆள்சேர்ப்பு முகாம்: நாக்பூரில் 26-இல் தொடக்கம்

    By DIN  |   Published on : 24th March 2018 01:14 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    இந்திய ராணுவத்தில் காலாட்படைப் பிரிவுக்கான ஆள்சேர்ப்பு முகாம் நாக்பூரில் மார்ச் 26 தொடங்கி 30-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
    இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
    இந்திய காலாட்படைப் பிரிவில் சோல்ஜர் (ஜெனரல் டியூட்டி) 26 பேர், செஃப் கம்யூனிட்டி-1, டிரேட்ஸ்மேன் (எக்யூப்மென்ட் ரிபெய்ரர்)-1 , டிரோட்ஸ்மேன் (டெய்லர்)-1 ஆகிய பணியிடங்களுக்கான ஆள்சேர்ப்பு முகாம் மகாராஷ்டிர மாநிலம், நாக்பூர், சீதாபுல்டி கோட்டை, கீரினடையர்ஸ் என்ற இடத்தில் நடைபெற உள்ளது. முகாமில் சோல்ஜர் (ஜெனரல் டியூட்டி) பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றும், 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் குறைந்தபட்சம் 45 சதவீத மதிப்பெண்கள் பெற்றவராகவும் இருக்க வேண்டும். செஃப் கம்யூனிட்டி, டிரேட்ஸ்மேன் (எக்யூப்மென்ட் ரிபெய்ரர்), டிரோட்ஸ்மேன் (டெய்லர்) ஆகிய பணியிடங்களுக்கு 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தாலே போதுமானதாகும்.
    இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிப்போர் 160 செ.மீ. உயரமும், 50 கிலோ உடல் எடையும், மார்பளவு 72 முதல் 82 செ.மீ. உள்ளவராகவும், 18 முதல் 42 வயது வரை உள்ளவராகவும் இருக்க வேண்டும். மேலும், விண்ணப்பதாரர்கள் அரசுப் பணியிலோ, அரசு உதவி பெறும் நிறுவனத்திலோ, தனியார் துறையிலோ, சுயதொழிலிலோ லாபம் ஈட்டுபவராகவும் இருக்க வேண்டும். அரசுப் பணியில் உள்ளவராக இருந்தால் அனுமதி சான்றிதழுடன் வரவேண்டும்.
    விண்ணப்பதாரர்கள் தங்களின் முன்கைகளின் உள்புறத்தில் நிரந்தரமாக பச்சை குத்தியிருந்தால் அதற்கான சான்றிதழை பூர்த்தி செய்து தரவேண்டும். உடலின் மற்ற இடங்களில் நிரந்தரமாக பச்சை குத்தியிருக்கும் விண்ணப்பதாரர்கள் நிராகரிக்கப்படுவர். 18 முதல் 21 வயது வரை விண்ணப்பிக்கும் திருமணமாகாத விண்ணப்பதாரர்கள் அதற்கான சான்றிதழை ஊராட்சி அலுவலகத்தில் பெற்று வழங்க வேண்டும்.
    விண்ணப்பதாரர்கள் தங்களின் அசல், நகல் கல்விச் சான்றிதழ்கள், அசல், நகல் பள்ளி மாற்று சான்றிதழ்கள், ஒரு மாதத்துக்குள் எடுக்கப்பட்ட 8 பாஸ்போர்ட் அளவிலான புகைப்படங்கள், வீட்டுச் சான்றிதழ், காவல் துறையின் நன்னடத்தை சான்றிதழ்கள் ஆகியவற்றை எடுத்து வர வேண்டும். விண்ணப்பதாரர்கள் மருத்துவரிடம் கண்பார்வை, அகன்ற பாதம் ஆகியவற்றுக்கான பரிசோதனைகளை முன்பே செய்து வர வேண்டும். விருப்பமுள்ளவர்கள் இந்த முகாமில் பங்கேற்று பயனடைய வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai