Enable Javscript for better performance
வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடத்தில் ஸஹஸ்ர கலசாபிஷேக விழா தொடக்கம்- Dinamani

சுடச்சுட

    

    வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடத்தில் ஸஹஸ்ர கலசாபிஷேக விழா தொடக்கம்

    By DIN  |   Published on : 24th March 2018 01:15 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வாலாஜாப்பேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் சகல தேவதா ஹோமத்துடன் ஸஹஸ்ர கலசாபிஷேகம் மற்றும் 14-ஆம் ஆண்டு விழா 23-ஆம் தேதி தொடங்கி 26-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
    நாள்தோறும் காலை 5.30 மணிக்கு மங்கள இசை, 6.00 மணிக்கு சுப்ரபாதம், 6.15 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி, 6.30 மணிக்கு கோ பூஜை, 6.45 மணிமுதல் வேத பாராயணம், தேவதா அனுக்யம், மகா கணபதி பூஜை, 8.00 மணிக்கு 1008 கலசங்களுக்கு சிறப்புபூஜை, லக்ஷ்மி பூஜை, மற்றும் சகல தேவதா ஆவாஹணம், 8.30 மணிக்கு மகா சங்கல்பம், சகல தேவதா ஜபம், 9.00 மணிக்கு தன்வந்திரி மூலமந்திர ஜபம், 10.30 மணிக்கு ஹோமம், 12 மணிக்கு மஹா பூர்ணாஹூதி, 12.15 மணிக்கு சதுர்வேத பாராயணம், 12.30 மணிக்கு பிரசாத விநியோகம், 1.00 மணிக்கு அன்னதானம் நடைபெற உள்ளது.
    விழாவில் கலவை சச்சிதானந்த சுவாமிகள், மேல்மருவத்தூர்ஆதிபராசக்தி பீட துணைத் தலைவர் கோ.ப. அன்பழகன், ராணிப்பேட்டை எம்எல்ஏ ஆர். காந்தி கலந்து கொள்ளவுள்ளனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai