Enable Javscript for better performance
100% மானியத்தில் வேளாண் உற்பத்திக் குழுக்களுக்கு உபகரணங்கள் வழங்கல்: ஆட்சியர் தொடங்கி வைத்தார்- Dinamani

சுடச்சுட

    

    100% மானியத்தில் வேளாண் உற்பத்திக் குழுக்களுக்கு உபகரணங்கள் வழங்கல்: ஆட்சியர் தொடங்கி வைத்தார்

    By DIN  |   Published on : 24th March 2018 01:14 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கூட்டுப்பண்ணைக் குழுத் திட்டத்தில் மாவட்டம் முழுவதும் 98 வேளாண் உற்பத்திக் குழுக்களுக்கு தலா ரூ. 5 லட்சம் மதிப்பில் 100 சதவீத மானியத்தில் வேளாண் இயந்திர உபகரணங்கள் வழங்கப்பட உள்ளன. இப்பணிகளை ஆட்சியர் எஸ்.ஏ.ராமன் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தார்.
    கூட்டுப்பண்ணைத் திட்டத்தில் காட்பாடி, ஆற்காடு ஆகிய வட்டங்களைச் சேர்ந்த 5 வேளாண் உற்பத்திக் குழுக்களுக்கு வேளாண் இயந்திரங்கள் வழங்கும் நிகழ்ச்சி ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.
    இதில், ஆட்சியர் எஸ்.ஏ.ராமன் பங்கேற்று சேனூர் ஊராட்சியைச் சேர்ந்த 2 வேளாண் உற்பத்திக் குழுக்கள், ஆற்காடு வட்டம் சக்கரமல்லூர், லாடாவரம், ஆயிலம் ஊராட்சிகளைச் சேர்ந்த 3 வேளாண் உற்பத்திக் குழுக்கள் ஆகியவற்றுக்கு தலா ரூ. 5 லட்சம் என மொத்தம் ரூ. 25 லட்சம் மதிப்பில் 3 பவர் டிரல்லர் இயந்திரங்களை முழு மானியத்துடன் வழங்கினார்.
    இதேபோல், நடப்பு நிதியாண்டில் மாவட்டத்தில் உள்ள 98 வேளாண் உற்பத்திக் குழுக்களுக்கு தலா ரூ. 5 லட்சம் மதிப்பில் பவர் டிரல்லர், களையெடுக்கும் கருவி உள்ளிட்ட வேளாண் இயந்திரங்கள் வழங்கப்பட உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
    நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் தா.செங்கோட்டையன், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) ஜி.சி.சிங், உழவர் பயிற்சி மைய துணை இயக்குநர் சுப்புலட்சுமி, வேளாண் உதவி இயக்குநர் சத்தியமூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai