Enable Javscript for better performance
அரசுப் பள்ளிகளில் ஆண்டு விழா- Dinamani

சுடச்சுட

    

    ஆம்பூர் உமர்சாலை நகராட்சி தொடக்கப் பள்ளி மற்றும் வெள்ளக்கல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி ஆகியவற்றின் ஆண்டு விழா புதன்கிழமை நடைபெற்றது.
    ஆம்பூர் உமர்சாலை நகராட்சி தொடக்கப் பள்ளி ஆண்டு விழாவுக்கு, மாதனூர் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் திருப்பதி தலைமை வகித்தார். கூடுதல் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் மாதேஷ் குத்துவிளக்கேற்றி விழாவை தொடங்கி வைத்தார். தலைமை ஆசிரியர் பக்தவச்சலு வரவேற்றார். ஆசிரியை மலர்விழி ஆண்டறிக்கை வாசித்தார். விழாவில் கரகம், ஒயிலாட்டம், கோலாட்டம் மற்றும்  நாடகங்கள் நடைபெற்றன. பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவர் நித்யா, ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியை சந்திரகாந்தா, ஜேசிஸ் சங்கத் தலைவர் தினேஷ், ஆசிரியர் பயிற்றுநர்கள் காமராஜ், மகேஷ், வழக்குரைஞர் தரணிதரன், பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் ரவிசந்திரன், சுப்பிரமணி, வில்பிரட், சீனிவாசன், சுமதி ஆகியோர் கலந்து கொண்டனர். ஆசிரியை புவனேஸ்வரி நன்றி கூறினார்.
    வெள்ளக்கல்: வெள்ளக்கல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற ஆண்டு விழாவுக்கு, மாதனூர் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் திருப்பதி தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் எஸ். தட்சிணாமூர்த்தி வரவேற்றார். ஆசிரியர் ஜெகன் ஆண்டறிக்கை வாசித்தார். மாதனூர் கூடுதல் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் மாதேஷ் வாழ்த்திப் பேசினார். வாணியம்பாடி இந்து மேல்நிலைப் பள்ளி தமிழாசிரியர் கோட்டீஸ்வரன் சிறப்புரையாற்றினார். மாணவர்களின் சிலம்பாட்டம், வில்லுப்பாட்டு, கரகாட்டம், காவடியாட்டம், நாடகம், யோகா உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. 
    பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கும், சிறந்த மாணவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவர் வேலு, புரவலர் தலைவர் 
    மகாலிங்கம், துணைத் தலைவர் திருநாவுக்கரசு ஆகியோர் கலந்து கொண்டனர்.
    5-ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு தென்னை மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. பள்ளியில் புதிதாக 14 புரவலர்கள் சேர்க்கப்பட்டனர்.
     120 புரவலர்களுடன் ஒன்றியத்திலேயே அதிக புரவலர்களை கொண்ட பள்ளி என அதிகாரிகளால் இப்பள்ளி பாராட்டப்பட்டது.  ஆசிரியர் ஹரிபாபு நன்றி கூறினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai