Enable Javscript for better performance
ஆயுதப்படை காவலரிடம் செல்லிடப்பேசி பறித்தவர் கைது- Dinamani

சுடச்சுட

    

    வேலூரில் ஆயுதப்படை காவலரிடம் செல்லிடப்பேசியை பறித்த இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.
    வேலூர் ஆயுதப்படையில் காவலராகப் பணியாற்றி வருபவர் ஜெகன் (27). இவர், பணிக்குச் செல்ல வியாழக்கிழமை நேதாஜி நகர் காவலர் குடியிருப்பில் இருந்து பேருந்தில் சென்றார். தலைமை தபால் நிலையம் அருகே உள்ள பேருந்து நிறுத்தத்தில் அவர் இறங்கிய போது, அவரது சட்டை பாக்கெட்டில் இருந்த செல்லிடப்பேசியை இளைஞர் ஒருவர் பறித்துக் கொண்டு ஓடியுள்ளார். அவரை ஜெகன் விரட்டிச் சென்று பிடித்து வேலூர் தெற்கு காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். 
    விசாரணையில், அவர் சலவன்பேட்டை திருப்பூர்குமரன் காலனியைச் சேர்ந்த ரகுநாதன் (23) என்பது தெரியவந்தது. இதையடுத்து, அவரை போலீஸார் கைது செய்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai