Enable Javscript for better performance
கல்லூரி ஆண்டு விழா- Dinamani

சுடச்சுட

    

    ஆற்காடு எஸ்எஸ்எஸ் கலை, அறிவியல் கல்லூரி ஆண்டு விழா புதன்கிழமை நடைபெற்றது.
    விழாவுக்கு, கல்லூரியின் நிறுவனத் தலைவர் ஏ.கே.நடராஜன் தலைமை வகித்தார். பொருளாளர் சரவணன், நிர்வாக அறங்காவலர் செல்வம், பொருளாளர்  ஏ.என்.சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வணிகவியல் துறைத் தலைவர் விஜயலட்சுமி வரவேற்றார். 
    மாவட்டக் கல்லூரி கல்வி இணை இயக்குநர் எம். வளர்மதி சிறப்புரையாற்றினார். மேலும், பல்வேறு போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.
    இதில், கல்லூரிப் பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
    இதையொட்டி  நடைபெற்ற விளையாட்டு விழாவில், ஆற்காடு நகரக் காவல் ஆய்வாளர்  ஜெ.ஆனந்தன் ஒலிம்பிக் ஜோதியை ஏற்றி வைத்து, விளையாட்டுப் போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்குப் பரிசுகளை வழங்கினார். ஆங்கிலப் பேராசிரியர் அலெக்ஸ் ஆங்ளி நன்றி கூறினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai