Enable Javscript for better performance
காவிரி மேலாண்மை வாரியம்: மத்திய அரசைக் கண்டித்து பாமக கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    காவிரி மேலாண்மை வாரியம்: மத்திய அரசைக் கண்டித்து பாமக கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம்

    By DIN  |   Published on : 31st March 2018 01:44 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க தாமதம் செய்துவரும் மத்திய அரசைக் கண்டித்து வேலூர் பகுதியில் உள்ள வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றி பாமகவினர் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    உச்ச நீதிமன்றம் விடுத்த 6 வார கெடு முடிந்த நிலையிலும், மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கவில்லை. இதைக் கண்டித்து தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. 
    இதன் ஒருபகுதியாக பாமக சார்பில் வேலூரை அடுத்த ரங்காபுரம், சத்துவாச்சாரி, காகிதப் பட்டறை, சேண்பாக்கம், அலமேலுமங்காபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள வீடுகளில் வெள்ளிக்கிழமை கருப்புக் கொடி ஏற்றப்பட்டது. 
    மேலும், ஆங்காங்கே கருப்புக் கொடி ஏந்தியபடி ஊர்வலமாகச் சென்று மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். இதில், முன்னாள் மத்திய அமைச்சர் என்.டி.சண்முகம், மாவட்ட துணைச் செயலர் சரவணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    குடியாத்தத்தில்...
    வேலூர் தெற்கு மாவட்ட பாமக சார்பில் குடியாத்தம் புதிய பேருந்து நிலையம் எதிரே கருப்புக் கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    ஆர்ப்பாட்டத்துக்கு, கட்சியின் மாவட்டச் செயலாளர் ஜி.கே.ரவி தலைமை வகித்தார். நகரத் தலைவர் விஜயகுமார், மாநில இளைஞரணித் துணைத் தலைவர் என்.
    குமார், மாநில வன்னியர் பேரவை துணைத் தலைவர் ஜி.சுரேஷ், நகர அமைப்புச் செயலர் எஸ்.குமார், ஒன்றியச் செயலர் ம.கோபி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    அரக்கோணத்தில்...
    அரக்கோணம் புதிய பேருந்து நிலையத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, நகர பாமக செயலர் ரமேஷ்பாபு தலைமை வகித்தார். நகரத் தலைவர் பாலாஜி வரவேற்றார். இதில், மாநிலத் துணைப் பொதுச் செயலர் சரவணன், வேலூர் கிழக்கு மாவட்டச் செயலாளர் அ.மா.கிருஷ்ணன், தலைமை நிலையப் பேச்சாளர் தம்பிஏழுமலை, மாவட்ட வன்னியர் சங்கச் செயலர் கோ.ஏழுமலை, சிலம்பம்ராஜ், நாகராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தொடர்ந்து, நகரில் பாமகவினரின் வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றப்பட்டது.

    ஆம்பூரில்...
    ஆம்பூர் அருகே மிட்டாளம் ஊராட்சி வன்னியநாதபுரம் கிராமத்தில் இளைஞர்கள் கருப்பு கொடி ஏந்தி ஊர்வலம் சென்றனர். மேலும் வீடுகளிலும் கருப்பு கொடி கட்டி எதிர்ப்பு தெரிவித்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai