Enable Javscript for better performance
பாழடைந்த அரசுப் பள்ளிக் கட்டடங்களை சார்-ஆட்சியர் ஆய்வு- Dinamani

சுடச்சுட

    

    பாழடைந்த அரசுப் பள்ளிக் கட்டடங்களை சார்-ஆட்சியர் ஆய்வு

    By DIN  |   Published on : 31st March 2018 01:46 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருப்பத்தூர் அருகே கருப்பனூர் கிராமத்தில் பாழடைந்த நிலையில் உள்ள அரசுப் பள்ளிக் கட்டடங்களை சார்-அட்சியர் பி.பிரியங்கா பங்கஜம் புதன்கிழமை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
    திருப்பத்தூர் அருகே உள்ள கருப்பனூர் கிராமத்தில் ஆதி திராவிடர் நலத் தொடக்கப் பள்ளி உள்ளது. காமராஜர் முதல்வராக இருந்தபோது அடிக்கல் நாட்டப்பட்டு, முன்னாள் அமைச்சர் கக்கனால் திறக்ககப்பட்டது.
    இந்நிலையில், பாழடைந்த நிலையில் பள்ளிக் கட்டடங்கள் உள்ளதாக கடந்த பிப்ரவரி மாதம் தினமணியில் புகைப்படத்துடன் விரிவான செய்தி வெளியானது.  இதையடுத்து சார்-ஆட்சியர் பி.பிரியங்கா பங்கஜம் புதன்கிழமை பள்ளியைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதுகுறித்து அவர் கூறுகையில், பயனற்ற நிலையில் உள்ள சத்துணவுக் கூடம் மற்றும் கழிப்பறைகளை அகற்ற ஆதி திராவிடர் நலத் துறை மற்றும் ஆட்சியருக்கு தகவல் அளிக்கப்படும் என்றார். இதனால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai