Enable Javscript for better performance
புனித வெள்ளியில் சிறப்பு பிரார்த்தனை- Dinamani

சுடச்சுட

    

    வாணியம்பாடியை அடுத்த உதயேந்திரம் தூயநெஞ்ச ஆண்டவர் ஆலயத்தில் புனித வெள்ளி சிறப்புப் பிரார்த்தனை வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 
    கிறிஸ்தவர்களின் தவக்காலத்தின் கடைசி நாளான புனித வெள்ளியையொட்டி, இயேசுவின் சிலுவைப் பாடுகளை நினைவு கூரும் சிலுவைப் பாதை எனப்படும் சிறப்பு பிரார்த்தனை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
    ஆலய பங்குதந்தை ராயப்பன் தலைமையில் நடைபெற்ற இந்த பிரார்த்தனையில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு இயேசுவின் சிலுவை பாதை பாடுகளை நினைவு கூர்ந்தனர். 
    பின்னர் பிற்பகல் 3 மணி அளவில் இயேசு சிலுவையில் அறையப்பட்டதை நினைவு கூரும் சிறப்பு சிலுவை ஆராதனை நடைபெற்றது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai