Enable Javscript for better performance
பேருந்து நிலையத்தை வேறு இடத்துக்கு மாற்ற எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    பேருந்து நிலையத்தை வேறு இடத்துக்கு மாற்ற எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்

    By DIN  |   Published on : 31st March 2018 01:44 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பேர்ணாம்பட்டு பேருந்து நிலையத்தை வேறு இடத்துக்கு மாற்றாதிருக்கக் கோரி, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் நான்கு கம்பம் அருகே வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    பேர்ணாம்பட்டு பேருந்து நிலையம், நகரின் மையப் பகுதியில் காவல் துறைக்குச் சொந்தமான இடத்தில் நீண்ட நாள்களாக இயங்கி வருகிறது. போதிய இடவசதி இல்லாததால் பேருந்து நிலையத்தை வேறு இடத்துக்கு மாற்றுவது குறித்து வருவாய்த் துறையினர் ஆலோசித்து வருகின்றனர். ஆனால், நகரப் பகுதியில் பேருந்து நிலையம் அமைக்க போதுமான இடம் கிடைக்கவில்லை.
    இந்நிலையில் பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் ஒன்றரை கி.மீ. தொலைவில் ஒன்றியப் பகுதியில் உள்ள பங்களாமேடு அருகே வீட்டுமனைகள் அமைத்துள்ள தனியார் ஒருவர் பேருந்து நிலையம் அமைக்க 2 ஏக்கர் நிலத்தை தானமாகக் கொடுப்பதாகக் கூறியுள்ளார்.
    அங்கு பேருந்து நிலையத்தை மாற்றுவது குறித்து வருவாய்த் துறையினர் முயற்சி மேற்கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
    இந்நிலையில், பொதுமக்களுக்கு பாதுகாப்பற்ற அந்த இடத்துக்கு பேருந்து நிலையத்தை மாற்றக் கூடாது எனவும், பழைய இடத்திலேயே தொடர வலியுறுத்தியும், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    ஆர்ப்பாட்டத்துக்கு, கட்சியின் நகரத் தலைவர் ரியாஸ்அஹமது தலைமை வகித்தார். மாநிலப் பேச்சாளர் முஹம்மத் பைசல் அஹமது கண்டன உரையாற்றினார். மாவட்டச் செயலர் இஸ்மாயில், நகர நிர்வாகிகள் உமர்அஹமது, ரியாஸ்அஹமது, அஸ்லம் பாஷா, நகர காங்கிரஸ் தலைவர் சுரேஷ்குமார், முன்னாள் நகர பாஜக தலைவர் கோவிந்தராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai