Enable Javscript for better performance
மணல் கடத்திச் சென்ற டிராக்டர் மோதியதில் உடைந்த மின் கம்பம்: ஓட்டுநர் கைது- Dinamani

சுடச்சுட

    

    மணல் கடத்திச் சென்ற டிராக்டர் மோதியதில் உடைந்த மின் கம்பம்: ஓட்டுநர் கைது

    By DIN  |   Published on : 31st March 2018 01:47 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வாணியம்பாடி அருகே மணல் கடத்தி வந்த டிராக்டர் மோதியதில் மின் கம்பம் உடைந்தது. இதுதொடர்பாக  டிராக்டர் ஓட்டுநரை போலீஸார் கைது செய்து, டிராக்டரை பறிமுதல் செய்தனர். 
    வாணியம்பாடியை அடுத்த உதயேந்திரம், சுப்புராயன்கோவில், மேட்டுபாளையம், தும்பேரி பாலாற்றில் மணல் கொள்ளை நடந்து வருகிறது. 
    இந்நிலையில், வெள்ளிக்கிழமை உதயேந்திரம் சுப்புராயன் கோயில் வட்டத்தில் உள்ள பாலாற்றில்இருந்து மணல் கடத்தி வந்த டிராக்டர் சாலையோரம் இருந்த மின் கம்பத்தின் மீது மோதியது. பின்னர், அதன் அருகே உள்ள வீட்டின் மீது மோதி நின்றது. இதில், மின் கம்பம் இரண்டாக உடைந்து, மின் கம்பிகள் சாலையில் விழுந்தன.  சப்தம் கேட்டு வந்த பொதுமக்கள், இதுகுறித்து மின்வாரிய அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து மின் இணைப்பு உடனடியாகத் துண்டிக்கப்பட்டது.  தகவலறிந்த வந்த வருவாய் ஆய்வாளர் ராஜ்குமார் தலைமையிலான வருவாய்த் துறையினர் அங்கு வந்த விபத்துக் காரணமான டிராக்டரை பிடிக்க முயன்றனர். அப்போது, அங்கிருந்து மாற்று டிராக்டர் மூலம் மணல் எடுத்துச் செல்ல முயன்ற கொள்ளையர்களுக்கும், வருவாய் ஆய்வாளர் ராஜ்
    குமாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் மணல் கொள்ளையர்கள், ராஜ்குமாரை தாக்கி கீழே தள்ளிவிட்டு டிராக்டருடன் தப்பினர். 
    இதையடுத்து வருவாய்த் துறையினர் டிராக்டரை விரட்டி சென்று மடக்கிப் பிடித்தனர். 
    இதுகுறித்து வருவாய் ஆய்வாளர் ராஜ்குமார், தன்னை பணி செய்யவிடாமல் தடுத்து கொலை மிரட்டல் விடுத்ததாக டிராக்டர்  உரிமையாளர் மூவேந்திரன் மீது வாணியம்பாடி கிராமியக் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். 
    அதன் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து  டிராக்டர் ஓட்டுநர் தனபாலை கைது செய்து, 2 டிராக்டர்களை பறிமுதல் செய்தனர். மேலும் தலைமறைவான டிராக்டர் உரிமையாளர் உதயேந்திரத்தை சேர்ந்த மூவேந்திரனை தேடி வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai