Enable Javscript for better performance
ரயிலில் பயணிகளிடம் பணம் பறிப்பு: 37 திருநங்கைகளுக்கு அபராதம்- Dinamani

சுடச்சுட

    

    ரயிலில் பயணிகளிடம் பணம் பறிப்பு: 37 திருநங்கைகளுக்கு அபராதம்

    By DIN  |   Published on : 31st March 2018 01:46 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    காட்பாடி வழியாகச் செல்லும் ரயில்களில் பயணிகளிடம் பணம் பறித்ததாக 37 திருநங்கைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
    காட்பாடி வழியாகச் செல்லும் வடமாநில ரயில்களில் திருநங்கைகள் கும்பலாகச் சென்று பயணிகளை மிரட்டி பணம் பறிப்பதாக புகார்கள் வந்தன.
    குடியாத்தம் மேல்பட்டியிலிருந்து அரக்கோணம் ரயில் நிலையம் வரையில் பயணிகளிடம் அதிகளவில் பணம் பறிப்புச் சம்பவங்கள் நடைபெற்று வந்தது தெரியவந்தது. திருநங்கைகளின் இந்த அத்துமீறலால் ரயில் பயணிகள் கடும் மன உளைச்சலுக்கு 
    உள்ளாகினர். 
    இதுகுறித்து ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து ஆய்வாளர் செந்தில்ராஜ் தலைமையில் போலீஸார் தினமும் ரயில்களில் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 
    இந்நிலையில், கடந்த  20-ஆம் தேதி முதல் நடத்தப்பட்ட சோதனையில், ரயில்வே விதிகளை மீறி பயணிகளிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்தது, டிக்கெட் பெறாமல் பயணம் செய்தது, பயணிகளை தகாத வார்த்தைகளில் திட்டியது உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக 37 திருநங்கைகளுக்கு ரூ. 15 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. 
    தொடர்ந்து, ரயில்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் போலீஸார் தெரிவித்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai