Enable Javscript for better performance
அரக்கோணம்: 19 அஞ்சலகங்களில் ஆதார் சேவை மையங்கள்- Dinamani

சுடச்சுட

    

    அரக்கோணம் அஞ்சல் கோட்டத்தில் 19 அஞ்சலகங்களில் ஆதார் சேவை மையங்கள் செயல்பட்டு வருவதாகவும் அவற்றை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் எனவும் அரக்கோணம் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் பிரகாஷ் தெரிவித்தார். 
    இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
    கடந்த ஆண்டு ஜூலை மாதம் முதல் இந்தியாவில் அஞ்சலகங்களில் ஆதார் சேவை மையம் தொடங்கப்பட்டு, சேவை புரிந்து வருகிறது. 
    அரக்கோணம் அஞ்சல் கோட்ட த்தில் கடந்த மார்ச் 31-ஆம் தேதி முதல் 19 அஞ்சலகங்களில் ஆதார் சேவை மையங்கள் செயல்பட்டு வருகின்றன.  அரக்கோணம் தலைமை அஞ்சல் அலுவலகத்திலும், அதன் கீழ் உள்ள சோளிங்கர், ஜோதிநகர், பனப்பாக்கம், நெமிலி, பழனிபேட்டை, தக்கோலம் ஆகிய கிளை அஞ்சலகங்களிலும், ராணிப்பேட்டை தலைமை அஞ்சல் அலுவலகத்திலும் அதன் கீழ் உள்ள வாலாஜாபேட்டை, ஆற்காடு, காவேரிபாக்கம், மேல்விஷாரம், கலவை, திமிரி, பிஹெச்இஎல் ராணிப்பேட்டை, அம்மூர், சக்கரமல்லூர், திருவலம் மற்றும் ராணிப்பேட்டை தொழிற்பேட்டை ஆகிய கிளை அஞ்சலகங்களிலும் ஆதார் சேவை மையங்கள் செயல்பட்டு வருகின்றன. 
    இந்த மையங்களில் ஆதார் புதிய பதிவும், 5 முதல் 15 வயது வரையிலுள்ள குழந்தைகளுக்கு ஆதார் பயோ மெட்ரிக் திருத்தங்கள் ஆகியவை இலவசமாக மேற்கொள்ளப்படுகின்றன. இதுதவிர ஆதார் விவரங்களில் மேற்கொள்ளப்படும் திருத்தங்களுக்கு ரூ. 25 மற்றும் ஜிஎஸ்டி ரூ. 5 என ரூ. 30 கட்டணமாக பெறப்படும் என்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai