Enable Javscript for better performance
ஐம்பொன் சாமி சிலை கடத்தல் வழக்கில் கைதானவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்- Dinamani

சுடச்சுட

    

    ஐம்பொன் சாமி சிலை கடத்தல் வழக்கில் கைதானவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்

    By DIN  |   Published on : 18th May 2018 12:41 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஆம்பூர் அருகே கோயில் சிலைக் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டவர்கள் ஆம்பூர் நீதிமன்றத்தில் வியாழக்கிழமை ஆஜர்படுத்தப்பட்டனர்.  மேலும் கோயில் நிர்வாகிகளிடம் சாமி சிலைகள் ஒப்படைக்கப்பட்டன.
    பேர்ணாம்பட்டு அருகே சாமி சிலைகள் கடத்தப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸ் ஐஜி 
    பொன். மாணிக்கவேல் தலைமையிலான போலீஸார் பேர்ணாம்பட்டு பகுதியில் சோதனை நடத்தினர். அதில் காரில் சாமி சிலைகளை கடத்திய பேர்ணாம்பட்டு அருகே அரவட்லா கிராமத்தை ஈஸ்வரன், ஆறுமுகம் மற்றும் பள்ளிகொண்டா அருகே அகரம்சேரியைச் சேர்ந்த குருசாமி ஆகிய மூவரை கைது செய்தனர். ரூ. 5 கோடி மதிப்பிலான வெள்ளி, தெய்வானை மற்றும் முருகர் ஆகிய 3 ஐம்பொன் சிலைகளை பறிமுதல் செய்தனர். 
    அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அது மாதனூர் அருகே பூமாலை கிராமத்தில் உள்ள முருகர் கோயிலில் இருந்து திருடு போன சிலைகள் என்பது தெரியவந்தது. இதையடுத்து கைது செய்யப்பட்டவர்கள் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.  
    சாமி சிலைகள் திருட்டு சம்பவம் நடந்த இடம் ஆம்பூர் கிராமியக் காவல் எல்லைக்கு உள்பட்ட பகுதியாக இருப்பதால் வழக்கு ஆம்பூர் கிராமியக் காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்டது. அதனால் பறிமுதல் செய்யப்பட்ட சாமி சிலைகள் ஆம்பூர் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டன.   இதைத் தொடர்ந்து, கைது செய்து சிறையில் அடைக்கப்பட்ட மூவரும் ஆம்பூர் நீதிமன்றத்தில் வியாழக்கிழமை ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை மே 31-ஆம் தேதி மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நீதிபதி ஜி.ரூபனா உத்தரவிட்டார்.  
    மேலும், நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்ட சாமி சிலைகள் நீதிமன்ற உத்தரவின் பேரில் பூமாலை முருகர் கோயில் நிர்வாகிகளிடம் ஒப்படைக்கப்பட்டன.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai