Enable Javscript for better performance
கூட்டுறவு துணைப் பதிவாளர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பால் உற்பத்தியாளர்கள்- Dinamani

சுடச்சுட

    

    கூட்டுறவு துணைப் பதிவாளர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பால் உற்பத்தியாளர்கள்

    By DIN  |   Published on : 18th May 2018 12:38 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பள்ளிகொண்டா அருகே பால் விநியோகத்துக்கான பணம் வழங்கப்படாததால் கூட்டுறவு துணைப் பதிவாளர் அலுவலகத்தை பால் உற்பத்தியாளர்கள் வியாழக்கிழமை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர்.
     பள்ளிகொண்டா அருகே கீழ்கொத்தூர் கிராமத்தில் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் உள்ளது. இங்கு சுமார் 200 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். இந்த கூட்டுறவு சங்கத்தின் மூலம் நாள் ஒன்றுக்கு சுமார் 2 ஆயிரம் லிட்டர் பால் ஆவின் நிறுவனத்துக்கு அனுப்பப்படுகிறது. பால் உற்பத்தியாளர்களுக்கு வாரத்துக்கு ஒருமுறை பணம் வழங்கப்பட வேண்டும். ஆனால் 2 மாதங்களுக்கு மேலாக பால் வழங்கியதற்காக பால் உற்பத்தியாளர்களுக்கு பணம் வழங்கப்படவில்லையாம். பால் உற்பத்தியாளர்களுக்கு சுமார் ரூ. 30 லட்சம் பணம் வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளதாகக் கூறப்படுகிறது. 
    இதுகுறித்து கூட்டுறவு சங்க நிர்வாகத்திடம் கேட்டதற்கு, இதுவரை பணம் வரவில்லையெனக் கூறி பால் உற்பத்தியாளர்களை திருப்பி அனுப்பியதாகக் கூறப்படுகிறது.  
     இதனால் ஆத்திரமடைந்த பால் உற்பத்தியாளர்கள், பொய்கையில் உள்ள பால்வள துணைப் பதிவாளர் அலுவலகத்துக்குச் சென்று முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  அலுவலகத்தை பூட்டி ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். அங்கு அதிகாரி இல்லாததால், அதிகாரி வந்த உடன் இதுகுறித்து தகவல் தெரிவிப்பதாக அலுவலக பணியாளர்கள் தெரிவித்தனர். 
    அப்போது, இரண்டு நாள்களுக்குள் நிலுவை பணத்தை வழங்காவிட்டால், கறவை மாடுகளுடன் வந்து பொய்கை தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டம் நடத்தப்போவதாக பால் உற்பத்தியாளர்கள் எச்சரித்தனர். பின்னர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai