Enable Javscript for better performance
தர்மராஜா கோயிலில் அக்னி வசந்த விழா கொடியேற்றம்- Dinamani

சுடச்சுட

    

    அரக்கோணம் சுவால்பேட்டையில் உள்ள திரெளபதியம்மன் சமேத தர்மராஜா கோயிலில் அக்னி வசந்த விழாவை முன்னிட்டு வியாழக்கிழமை கொடியேற்று உற்சவம் நடைபெற்றது.
    இக்கோயிலில் ஆண்டுதோறும் அக்னி வசந்த விழா எனும் தீமிதி திருவிழா விமரிசையாக நடைபெறுகிறது. இவ்வருடம் ஜூன் 3-ஆம் தேதி தீமிதி திருவிழா நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு வியாழக்கிழமை கொடியேற்று உற்சவம் நடைபெற்றது. 
    நகர ஆச்சாரி சமூகத்தைச் சேர்ந்தவர்கள் சார்பில் நடைபெற்ற இந்த விழாவில் காலை 9.50 மணிக்கு கொடியேற்றப்பட்டது. தொடர்ந்து மாலையில் மகாபாரத சொற்பொழிவு தொடங்கியது. 24-ஆம் தேதி முதல் தினமும் மகாபாரத நாடகம் நடைபெற உள்ளது. ஜூன் 3-ஆம் தேதி காலையில் படுகளக் காட்சியும் பூமுடிப்பும், மாலை 6.30 மணிக்கும் தீமிதி திருவிழாவும் நடைபெற உள்ளன.
    கொடியேற்று உற்சவத்தில் கோயில் விழாக் குழு கெளரவ தலைவர் ஆனந்தன், ஆச்சாரி சமூகத்தின் சார்பில் வேதகிரி, ஜெயராமன், விழா குழுத் தலைவர் சிலம்பம்ராஜ், செயலர் துரை
    சதீஷ், முன்னாள் நகர்மன்றத் துணைத் தலைவர் கே.வி.ரவிச்சந்திரன், தொழிலதிபர் பூபதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai