Enable Javscript for better performance
திருப்பத்தூரில் நகராட்சியில் 3 கடைகள் மட்டுமே ஏலம்- Dinamani

சுடச்சுட

    

    திருப்பத்தூரில் நகராட்சிக்குள்பட்ட 15 கடைகளில் 3 கடைகள் மட்டும் ஏலம் போனது. மற்ற கடைகளுக்கான ஏலம், தேதி குறிப்பிடாமல் ஒத்தி
    வைக்கப்பட்டது.
    திருப்பத்தூர் நகராட்சி சார்பில் புதிய பேருந்து நிலையத்தில் முதல் தளம் மற்றும் இரண்டாவது தளத்தில் உள்ள 15 கடைகளுக்கான ஏலம் ஆணையர் (பொறுப்பு) அசோக்குமார் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. ஏலம் தொடங்கியபோது, ஏலம் எடுப்பதில் மோதல் ஏற்படும் சூழல் ஏற்பட்டது. தகவல் அறிந்த திருப்பத்தூர் டி.எஸ்.பி., ஜேசுராஜ் தலைமையில் 3 காவல் ஆய்வாளர்கள் மற்றும் 50-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். ஏலதாரர்கள் ஏல நிபந்தனைகளை மதிக்காமல், சிலர் செல்லிடப்பேசியில் ஏல விபரத்தை தெரிவித்துக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. இதைப்பார்த்த மற்ற தரப்பினர், ஆணையர் அசோக்குமாரிடம் புகார் தெரிவித்தனர். இதனால் சிறிது நேரம் அதிகாரிகளுக்கும் ஏல தாரர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர், போலீஸார் வந்து சமாதானப்படுத்தினர்.
     இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், திருப்பத்தூர் நகராட்சியின் சார்பில் நடத்தப்படும் ஏலம் ஒவ்வொரு முறையும் அதிகாரிகளின் ஆதரவுடன், வாடகையை ஏற்றி வெளியில் சிண்டிகேட் அமைக்கப்படுகிறது. அதில் தற்போதுள்ள 1, 2, 3 கடைகளுக்கு 10 லட்சம் முதல் 15 லட்சம் ரூபாய் வரை வெளியில் சிண்டிகேட் நடக்கின்றது. இல்லை என்றால் யாரும் ஏலம் கேட்கக் கூடாது என மிரட்டுகின்றனர். இதற்கு அதிகாரிகளும் உடந்தையாக செயல்படுகின்றனர்.
    மேலும், நகராட்சி வருவாய்க்காக கடைகள் கட்டப்பட்டுள்ளன. இதில்,சிண்டிகேட் அமைப்பதால் நடுத்தர வியாபாரிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். இதனால் 15 கடைகளில் 3 கடைகள் மட்டும் ஏலம் போயின. இனியாவது முறையாக ஏலம் நடத்தப்பட வேண்டும் என வியாபாரிகளும் பொதுமக்களும் எதிர்பார்க்கின்றனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai