Enable Javscript for better performance
தொழில் தொடங்குவதாகக் கூறி ரூ.1.10 கோடி மோசடி: பெண் மீது எஸ்.பி. அலுவலகத்தில் புகார்- Dinamani

சுடச்சுட

    

    தொழில் தொடங்குவதாகக் கூறி ரூ.1.10 கோடி மோசடி: பெண் மீது எஸ்.பி. அலுவலகத்தில் புகார்

    By DIN  |   Published on : 18th May 2018 12:42 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தொழில் தொடங்குவதாகக் கூறி ரூ. 1.10 கோடி பணம் பறித்து மோசடி செய்ததாக பெண் ஒருவர் மீது வேலூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
     காட்பாடி முத்தமிழ் நகரைச் சேர்ந்தவர் பொன்னுசாமி. இவருக்கு சென்னையைச் சேர்ந்த ரகுபதி மூலம், காட்பாடி கழிஞ்சூரைச் சேர்ந்த உமாமகேஸ்வரி என்பவர் கடந்த 2016-ஆம் ஆண்டு அறிமுகமாகியுள்ளார். 
    அப்போது, மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனத்தில் காப்பர், வெள்ளி இறக்குமதி செய்திட ஏலம் விடப்பட உள்ளது. அந்த ஏலத்தை இருவரும் சேர்ந்து பெற்று தொழில் செய்யலாம் என பொன்னுசாமியிடம் உமாமகேஸ்வரி கூறியதாகத் தெரிகிறது. 
    அதற்கு முதலீடாக காட்பாடியில் உள்ள பொன்னுசாமியின் குடும்பத்துக்குச் சொந்தமான வீட்டுப் பத்திரத்தை சென்னையிலுள்ள வங்கியில் அடகு வைத்தும், பல்வேறு நபர்களிடம் கடனாகப் பெற்றும் ரூ. 1.10 கோடியை உமாமகேஸ்வரியிடம் அளித்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், இதுவரை தொழில் தொடங்காமல் உமாமகேஸ்வரி காலம் கடத்தி வந்தாகவும், பணத்தைத் திருப்பித் தராமல் ஏமாற்றி வருவதாகவும் கூறப்படுகிறது.  இதையடுத்து, பாதிக்கப்பட்ட பொன்னுசாமியின் சார்பில், அவரது மனைவி செல்வி வேலூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வியாழக்கிழமை புகார் அளித்தார். 
    அதில், தொழில் தொடங்குவதாகக் கூறி ரூ. 1.10 கோடி பணம் பெற்று, மோசடி செய்த உமாமகேஸ்வரி மீது நடவடிக்கை மேற்கொள்ளவும், பணத்தை திரும்பப் பெற்றுத் தரவும் வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    இது தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai