Enable Javscript for better performance
பைக் மீது ஆட்டோ மோதல்: இருவர் சாவு- Dinamani

சுடச்சுட

    

    அரக்கோணம் அருகே பைக் மீது ஆட்டோ மோதிய விபத்தில் இருவர் இறந்தனர்.
    அரக்கோணத்தை அடுத்த நாகவேடு கிராமத்தைச் சேர்ந்தவர் குமரவேல் (38). இதே கிராமத்தைச் சேர்ந்தவர் சுந்தரேசன் (21). இருவரும் புதன்கிழமை, நாகவேட்டில் இருந்து அரக்கோணத்துக்கு ஷேர் ஆட்டோவில் சென்று கொண்டிருந்தனர். ஆட்டோவை நாகவேட்டைச் சேர்ந்த துரை ஓட்டி வந்தார். 
    அப்போது, எதிரே வந்த பைக் மீது ஆட்டோ மோதியது. இதில் ஆட்டோ சாலையில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் பைக்கில் வந்த சின்ராஜ் (29), ஆட்டோவில் பயணம் செய்த குமரவேல் ஆகிய இருவரும் நிகழ்விடத்திலேயே இறந்தனர். 
    பலத்த காயமடைந்த சுந்தரேசன் அரக்கோணம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, பின்னர் சென்னை அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 
    இதுதொடர்பாக அரக்கோணம் கிராமிய போலீலார் வழக்குப் பதிந்து, ஆட்டோவை ஓட்டி வந்த துரையை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
    மது அருந்திய நிலையில் துரை ஆட்டோவை ஓட்டி வந்ததால்தான் இந்த விபத்து நிகழ்ந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai