Enable Javscript for better performance
முன்னாள் படை வீரர்கள் கவனத்துக்கு...- Dinamani

சுடச்சுட

    

    முன்னாள் படை வீரர் சார்ந்தோர் சான்றிதழ் பெற விரும்புவோர் தங்களிடம் உள்ள சான்றிதழ்களை மாவட்ட முன்னாள் படை வீரர் நல துணை இயக்குநர் அலுவலகத்தில் அளித்து இணையதளத்தில் பதிவு  செய்துகொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. 
    இதுகுறித்து வேலூர் மாவட்ட முன்னாள் படை வீரர் நல துணை இயக்குநர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
    2018-19-ஆம் ஆண்டு கல்லூரி சேர்க்கைக்காக முன்னாள் படைவீரர் சார்ந்தோருக்கு வழங்கப்படும் சான்றிதழ் இணையதளம் மூலமாக மட்டுமே வழங்க வேண்டும் என்று அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த சான்றிதழ் பெறுவதற்கான முன்னாள் படைவீரர்களின் விவரங்களை இணையதளத்தில் பதிவு செய்தால் மட்டுமே இணையதளம் மூலமாக சான்றிதழ் வழங்கப்படும்.  எனவே, சார்ந்தோர் சான்றிதழ் பெற விரும்பும் முன்னாள் படைவீரர்கள் அசல் படைவிலகல் சான்றிதழ், அசல் ஆதார் அட்டை, அசல் ஓய்வூதிய ஆணை, அசல் அடையாள அட்டை, தற்போது எடுக்கப்பட்ட பாஸ்போர்ட் அளவு புகைப்படம் 2, பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்பப்படிவம், வங்கிக் கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல் ஆகியவற்றை முன்னாள் படைவீரர் நல  துணை இயக்குநர் அலுவலகத்துக்கு எடுத்து வந்து பதிவு செய்ய வேண்டும்.  கடந்த 2017-ஆம் ஆண்டு வழங்கப்பட்ட சார்ந்தோர் சான்றிதழை இவ்வாண்டு பயன்படுத்த இயலாது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai