Enable Javscript for better performance
விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    திருப்பத்தூரில் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பட்டு முட்டை உற்பத்தி மையத்தை வேறு இடத்துக்கு மாற்றுவதைக் கண்டித்து விவசாயிகள் சங்கத்தினர் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    திருப்பத்ததூரை அடுத்த கசிநாயக்கன்பட்டி, பிருந்தாவன் தோப்பு பகுதியில் கடந்த 30 ஆண்டுகளாக மத்திய அரசின் பட்டு முட்டை உற்பத்தி மைய அலுவலகம் செயல்பட்டு வருகிறது. 
    இந்த மையத்தில் இருந்து பட்டு முட்டைகள் காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கும், ஆந்திரத்துக்கும் அனுப்பப்பட்டு வந்தன. இதனால், ஆயிரக்கணக்கான விவசாயிகள் பயனடைந்து வந்தனர். தற்போது இந்த அலுவலகம் தருமபுரி மாவட்டத்துக்கு மாற்றப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
    இந்நிலையில், தமிழக விவசாயிகள் சங்கத்தினர் திமுக வடக்கு ஒன்றியச் செயலாளர் கே.எஸ்.அன்பழகன் தலைமையில், திருப்பத்தூர் மத்திய பட்டு முட்டை தயாரிப்பு மையத்தின் முன் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 
    ஆர்ப்பாட்டத்துக்கு, விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் பரசுராமன் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தைத் தொடங்கி வைத்து மாநிலச் செயலாளர் தனபால் பேசுகையில், தமிழகத்தில் மத்திய அரசு விவசாயிகளை மிகவும் கொடுமைப்படுத்தி வருகிறது. இந்த பட்டு முட்டை உற்பத்தி மையத்தை வேறு மாவட்டத்துக்கு மாற்ற மத்திய அரசு முயற்சி மேற்கொண்டு வருவது கண்டிக்கத்தக்கது என்றார். மாவட்டச் செயலாளர் வர்ணகுமார் நன்றி கூறினார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai