Enable Javscript for better performance
வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு- Dinamani

சுடச்சுட

    

    குடியாத்தம் அருகே பூட்டிய வீட்டில் 8 சவரன் தங்க நகைகள், ரொக்கம் ரூ. 10 ஆயிரம் திருடு போனது.
     குடியாத்தத்தை அடுத்த அக்ராவரம், ரங்கசமுத்திரத்தைச் சேர்ந்தவர் முருகேசன்(60). தொழிலாளியான இவர், திங்கள்கிழமை வீட்டைப் பூட்டிவிட்டு, குடும்பத்தினருடன், குடியாத்தத்தில் உள்ள தனது உறவினர் வீட்டுக்குச் சென்றார். வியாழக்கிழமை வந்து பார்த்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த 
    8 சவரன் தங்க நகைகள், ரூ. 10 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. 
    இதுகுறித்த புகாரின்பேரில், கிராமிய போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai